ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - சிம்மம்

காலத்தை நிர்ணயித்து கடமையைச் செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் உங்களின் வளம் பெற செய்ய, பல உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
 
கேது தனஸ்தானத்திலும், ராகு அட்டமஸ்தானத்தில் அமர்வது நல்ல பலன் இல்லை என்றாலும், ஒராண்டு காலம் குருவின் பாதுகாப்பு இருப்பதால், பெரிய அளவில் கெடு பலன்கள் இருக்காது. இருப்பினும் அதிகம் பேசுவதை தவிர்த்து விடுவதும், பேசும் பேச்சில் எச்சரிக்கையுட்ன் இருப்பதும் நல்லது.
 
ஆக்க பூர்வமான காரியங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் நிலை உண்டாகும். அதிக செலவுகளை குறைத்து கொண்டு, தொழிலில் கவனம் செலுத்துவீர்கள்.
 
விளையாட்டுத் துறையில் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். கலை துறையினருக்கு, முயற்சிக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலிலும், அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் தடைகள் நீங்கி, வருமானமும், வர வேண்டிய உதவி தொகையும் கிடைக்கப் பெறுவீர்கள். 
 
அட்டம ராகு, குரு வீடு என்பதால் குருவின் குணத்தை ஒத்து தொடர்ந்து உங்களின் செயல்கள் அமையும். பிணயம் இடுவது தொழிலில் கூட்டு தொழில் மூலம் இணைந்து கைசாத்திடுதல் உங்களின் எதிர்கால நலனை பாதிக்கும். இவ்விடயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை.
 
திருமணத்தில் தடைகள் வந்து தேவையற்ற செயல்களுக்கு வழிவகுக்கும். எனினும் உங்களின் ராசியை குரு பார்ப்பது நல்ல காலமாக அமையும். எதையும் தாங்கி கொண்டு செயல்படுவீர்கள். புதிய யுக்தியை கையாளுவதும் செயல்களில் மாற்றம் கொண்டு வருவதும். உங்களின் வளர்ச்சிக்கு நன்மையை உண்டாக்கும். கலை துறை சார்ந்தவர்களுக்கு கலை துறையில் நற்பெயர் கிடைக்கும். பேச்சாற்றல் இருக்கும் அளவுக்கு திறமையும் வெளிபடுத்துவீர்கள்.
 
பரிகாரம்:
 
விநாயகர் வழிபாடும், பீஜ மந்திரம் உச்சரித்து தொடர்ந்து வேண்டிக் கொள்ள நல்ல காலமாகவும், திடமான வளம் பெறும் நல்ல வாய்ப்பும் அமைய பெறுவீர்கள்.